நாட்டு மக்களை பொருளாதார பேரிடரில் தள்ளிய பாஜகவைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்!

2354 Views
நாட்டு மக்களை பொருளாதார பேரிடரில் தள்ளிய பாஜகவைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்!
A woman takes rest next to a queue outside an ATM in Nehru Place on Sunday. Express photo by Oinam Anand. 04 December 2016

A woman takes rest next to a queue outside an ATM in Nehru Place on Sunday. Express photo by Oinam Anand. 04 December 2016

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கடந்த ஆண்டு நவம்பர் 8 அன்று கறுப்பு பணத்தை ஒழிக்க 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று திடீரென பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நரேந்திர மோடியின் இந்த தன்னிச்சையான அறிவிப்பால் நாடு பொருளாதார ரீதியில் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
நாட்டு மக்கள் ஒரு பெரிய நிலநடுக்கம் அல்லது புயல் ஏற்பட்டால் போன்ற பேரிடரில் சிக்கித் தவித்தால் எப்படி நிலைகுலைந்து நிர்க்கதியாகி நிற்பார்களோ அதைபோன்று இந்த பண மதிப்பீட்டு நடவடிக்கையின் மூலம் ஒரு பெரும் தேசியப் பொருளாதார பேரிடரை சந்தித்து நிலைகுலைந்து அதன் தாக்கத்திலிருந்து இன்றுவரை மீளமுடியாமல் தவிக்கின்றனர்.
பண மதிப்பீட்டு நடவடிக்கையால் கறுப்பு பணம், கள்ளப்பணம், ஊழல் ஒழிக்கப்படும் என்று வாய்ச்சவடால் விட்ட மோடியால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்நோக்கி சென்றுகொண்டுள்ளது. இந்த பணமதிப்பீட்டு நடவடிக்கையால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு  தனியார் முதலீடுகள் குறைந்துள்ளன. தொழில் உற்பத்தி சீர்குலைந்து விட்டது. விவசாயம் அழிந்து வருகிறது. ஏற்றுமதியும், இறக்குமதியும் நிலையற்று இருக்கிறது.  பல லட்சம் பேர் வேலைகளை இழந்தும், பணப்பரிவர்த்தனை இல்லாததால் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மூடப்பட்டும் வருகின்றன.
மோடியின் இந்த மோசமான நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி நாளை (8.11.2017) எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. நாளை மனிதநேய மக்கள் கட்சியினர் அனைவரும் கருஞ்சட்டை அணிவார்கள்.
மேலும் நாளை எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டாக நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதுடன் அப்போராட்டத்தில்  மனிதநேய மக்கள் கட்சியினர் கருஞ்சட்டை அணிந்து பங்குகொள்வார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் தோழமைக் கட்சிகள், இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என  அனைத்து தரப்பினரும் பெருவாரியாகப் பங்குகொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply