திருபுவனத்தில் இராமலிங்கம் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

2205 Views
திருபுவனத்தில் இராமலிங்கம் படுகொலை:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
201902120128569308_Ramalingam-murder-case-Kumbakonam_SECVPF
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் இராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஒரு கொலைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதை தீர விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவது காவல்துறையினரின் பணியாகும். ஆனால் காவல்துறை விசாரணைக்கு முன்பே ஒருசில அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருதலைப்பட்சமாக குற்றம்சாட்டுவது சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் செயலாகும்.
இந்தப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
இராமலிங்கம் அவர்களின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply