திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

2049 Views
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
திருப்பூருக்குத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை இந்து முன்னணியினர் தாக்க முயற்சித்து அதன் காரணமாக அவரது வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் ஆசிரியர் வீரமணி அவர்கள் உரையாற்றிய பொதுக் கூட்டத்திலும் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அறந்தாங்கியில் தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
பாஜகவும் அவர்களது ஆதரவு இயக்கங்களும் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி பயத்தால் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது. இக்கலவரத்தில் ஈடுபட்டோரை உடனடியாகக் கைது செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்  கொள்கிறேன்.
தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகமெங்கும் பயணிக்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க காவல்துறையும், தேர்தல் ஆணையமும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply