திமுக-மனிதநேய மக்கள் கட்சி உறவு: சில இணையதள விஷமங்களுக்கு கண்டனம்

1325 Views
திமுக-மனிதநேய மக்கள் கட்சி உறவு: 
சில இணையதள விஷமங்களுக்கு கண்டனம்
SMART-4920
 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அங்கம் வகித்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தமிழகம் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட பல அறப்போராட்டங்களில் கலந்துகொண்டு போராடி வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களிலும், இணையதள செய்திகளிலும் மனிதநேய மக்கள் கட்சி-திமுக உறவு குறித்து விஷமத்தனமாக கருத்துகள் பரப்பப்பட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பான ஆதாரமற்ற செய்திகளாகும். உள்நோக்கம் கொண்ட தீயசக்திகள் வதந்திகளைப் பரப்பி நிறைவேற்ற விரும்பும் சதித் திட்டம் பலிக்காது.
மனிதநேய மக்கள் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று நாட்டில் ஜனநாயக நெறிமுறைகளுக்கும், சமூகநல்லிணக்கத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் பெரும் ஆபத்தாய் உள்ள பாஜவை எதிர்த்துத் தேர்தல் களத்தில் போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply