தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானதில் பேரா எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை

2216 Views

கடந்த 16.04.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கொண்டுவந்த தமிழக மீனவர்கள் குறிப்பாக இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானதில் பேரா எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

நம்முடைய தமிழக மீனவர்கள் குறிப்பாக, இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு இலக்காவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக நம்முடைய இந்நிய அரசின் சார்பாக அதிகாரிகளோ, அமைச்சர்களோ, இலங்கைக்கு சென்றுவிட்டு திரும்பக்கூடிய வேளையில் மீண்டும் அந்த தாக்குதல் நடைபெறுகின்றது. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால், இலங்கையில் ஜனவரி மாதம் 13, 14ஆம் தேதி கூட்டு நடவடிக்கைக் கூட்டம் நடைபெற்ற பிறகும்கூட தொடர்ச்சியாக படகுகள் தாக்குதலுக்கு இலக்காவதும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக நடைபெற்று வருகின்றது. இதை ஒரு தேசிய பிரச்சனையாக மத்திய அரசு கருதவில்லையென்ற ஒரு நிலைதான் இருக்கின்றது. கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி 2011ல் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது உண்மைக்கு மாறாக வழக்குப் போட்டு 5 மீனவர்கள் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு 5 மாதங்களாக இலங்கை சிறையிலே இருக்கின்றார்கள். அவர்களை விடுதலை செய்வதற்காக தமிழக அரசு முயற்சி செய்கின்றது. அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மாதாந்திர உதவிகளை அளிக்க வேண்டும். இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருதற்கு தமிழக அரசு என்ன செய்ய போகின்றது என்பதை அரசாங்கத்தினுடைய கவனததிற்குக் கொண்டு வருகிறேன்.

Leave a Reply