தமிழகத்தில் முழுமையான மது விலக்கு வேண்டும்! சட்டப்பேரவை உரை.

2708 Views
தமிழகத்தில் முழுமையான மது விலக்கு வேண்டும்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து……
++++++++++++++++++++++++++++++++++++++++++
Dr. MH Jawahirullah MLA President, MMK

Dr. MH Jawahirullah MLA
President, MMK

 
நேற்றைய தினம் இந்த அவையிலே மதுவிலக்கு குறித்து மிகச் சூடான விவாதம் நடைபெற்றது. எனக்கு இன்று பேச வாய்ப்பு இருந்ததனாலே இடையிலே குறுக்கிட்டு நான் பேசவில்லை. மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள், இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினால்தான் இங்கே அமல்படுத்த முடியும் என்றும், வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டுமென்றெல்லாம் கருத்தைச் சொன்னார்கள்.
எங்களுடைய கோரிக்கை என்னவென்றால், தமிழகம் மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டு, பல சமூக நல மக்கள் சார்ந்த பிரச்சினைகளிலே நாம் முன்னோடியாக இருக்கின்றோம். சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழக அரசு தான் அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அந்த அரசு தான் அந்த அரசாணையைக் கொண்டு வந்து, அதற்காக இன்னும் நீதிமன்றத்திலே போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்திலே நிச்சயமாக நாம் வெற்றி பெறுவதற்கு ஒன்றாக இருக்க வேண்டும்.
 
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் லாட்டரியைத் தடை செய்தோம். இன்னும் இந்தியாவில் பல மாநிலங்களிலே லாட்டரி இருப்பதனால் அந்த மாநிலங்களுக்கு வருவாய் இருக்கின்றது. தமிழ்நாட்டில் இந்த சட்டமன்றத்திலேதான் பான்பராக்குக்கு தடையைக் கொண்டு வந்தோம். அது பக்கத்து மாநிலங்களிலே யெல்லாம் இருக்கின்றது. எனவே,அரசுக்கு ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி வருவாய் வந்தாலும்கூட, இதனால் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுடைய நல்வாழ்வில் ஏற்படக்கூடிய அந்த செலவைப் பார்க்கும்போது இது ஒரு பெரிய தொகையே இல்லை. நிச்சயமாக மனம் இருந்தால் வருவாய்க்கான வழி பிறக்கும், அதிலே மாற்றுக் கருத்து இல்லை.
 
எனவே, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கூடிய அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து என்னுடைய உரையை முடிக்கின்றேன்.
 
இவ்வாறு பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.
Leave a Reply