தனது மகளை சுட்டுக்கொல்ல டி.ராஜா உத்திரவிட வேண்டும் என்ற பி.ஜே.பி எச்.ராஜாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

1894 Views
தனது மகளை சுட்டுக்கொல்ல டி.ராஜா உத்திரவிட வேண்டும் என்ற பி.ஜே.பி எச்.ராஜாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
JNU-RajaJNU Student
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பாசிச வெறியர்களால் ABVP மாணவர் அமைப்பைத் தூண்டிவிட்டு வெறியாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது பாஜக. JNU மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையகுமார், தேசத்துரோக சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அவர்களின் மகள் அபராஜிதா உட்பட 20 மாணவர்கள் மீது பொய்வழக்குப் பதியப்பட்டு அவர்கள் தேசத்துரோகிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஜே.பி. எச்.ராஜா “தேசப்பற்றை நிரூபிக்க வேண்டுமென்றால் போராட்டத்தில் ஈடுபடும் தனது மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல கம்யூனிஸ்ட்டுகளுக்கு டி.ராஜா உத்திரவிடவேண்டும்” என்று கூறியுள்ளார். எச்.ராஜாவின் விஷமப் பேச்சை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆராய்ச்சி மாணவியாகப் பயின்றுவரும் டி.ராஜா அவர்களின் மகள் அபராஜிதா மத அடிப்படைவாதத்தையும், இந்துத்துவா கொள்கைகளையும் சமரசமின்றி எதிர்க்கும் ஜனநாயக முற்போக்கு சிந்தினை உடையவர். அவரை ‘தேசத்துரோகி’ என்று  சங்பரிவார் கூட்டம் அடையாளப்படுத்தி வருவது புதிதல்ல.
JNUவிற்குச் சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்திற்காக நாட்டுப்பற்றை நிரூபிக்க தந்தையே மகளைக் கொல்லவேண்டும் என்ற கொலைவெறிப் பேச்சை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாசிச வெறியர்களின் கடைசிப் புகழிடமாக இருந்த தேசப்பற்று தற்போது அவர்களின் முதல் புகழிடமாக மாறியுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் மத்தியில் இத்தகைய பாசிசப் போக்குகளை அனுமதிப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
இதுபோன்று விஷமத்தனமாக தொடர்ந்து பேசிவரும் எச்.ராஜா மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply