தந்தையின் மது பழக்கத்திற்கு எதிராக மாணவர் தற்கொலை: முழுமையான மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்!

1982 Views
தந்தையின் மது பழக்கத்திற்கு எதிராக மாணவர் தற்கொலை: முழுமையான மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்!
dinesh
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
மது பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தை சரிவர கவனிக்காத தந்தையின் செயலைக் கண்டித்து நெல்லையில் +2 மாணவர் தினேஷ் மனமுடைந்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. இதனால் மதுஅருந்துபவர்களின் உடல்நிலையும், குடும்ப சூழலும் சீரழிந்து வரும் நிலையில் தற்போது விரக்தியில் மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது என்பது வேதனைக்குரியது.
மதுவிலக்கு கொள்கையில் இரட்டை வேடம் போடும் எடப்பாடி அரசு எத்தனை உயிர்கள் போனாலும் கவலையில்லாமல் அரசுக்கு வருமானமே முக்கியம் என்ற நிலையில் மதுக்கடைகளை மூடாமல் உள்ளது வெட்கத்திற்குரியது.
மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் வீரியமிகுந்த போராட்டங்களை நடத்திய பிறகும் மதுக்கடைகளை மூடாமல் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரை மதுவிற்கு அடிமையாக்கி உள்ளது எடப்பாடி தலைமையிலான மக்கள் விரோத அரசு.
தமிழகத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர் வரையிலான உயிர்களைப் பறிக்கும் மதுவிற்கு உடனே தடைவிதிக்க வேண்டும், இல்லையெனில் மாணவர் தினேஷ் போன்ற பல உயிர்களை நாம் இழக்க நேரிடும்.
தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க வேண்டுமெனில் தமிழக அரசு தமிழகத்தில் உடனடியாக முழுமையான மதுவிலக்கை நடைமுறைப் படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply