தடா அப்துல் ரஹீம் குண்டர் சட்டத்தில் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

2091 Views
தடா அப்துல் ரஹீம் குண்டர் சட்டத்தில் கைது:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
25552056_1950308651651880_6920024811975477530_n
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா அப்துல் ரஹீம் அவர்கள் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அப்துல் ரஹீம், நீதிமன்றம் மூலம் பிணைப் பெற்று இன்று சிறையிலிருந்து வெளியே வரும் சூழலில், சென்னை காவல்துறை திடீரென குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
அப்துல் ரஹீம் மீது வழக்கு பதியப்பட்டிருந்தால் அதனை சட்ட ரீதியில் எதிர்கொள்ளமால் அவரைக் காவல்துறை முடக்க நினைப்பது அப்பட்டமான மனிதஉரிமை மீறல் ஆகும்; ஜனநாயக உரிமைகளை நசுக்கும் செயலாகும்.
எனவே, தடா அப்துல் ரஹீம் மீது பதியப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தை உடனே திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply