சென்னை மண்ணடியில் ரூ.53 லட்சம் கொள்ளை: 12 மணி நேரத்தில் கொள்ளையர்களைப் பிடித்து பணத்தை மீட்ட சென்னை மாநகர காவல்துறைக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு!

2368 Views
சென்னை மண்ணடியில் ரூ.53 லட்சம் கொள்ளை:
12 மணி நேரத்தில் கொள்ளையர்களைப் பிடித்து பணத்தை மீட்ட சென்னை மாநகர காவல்துறைக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு!
com6f
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னை, மண்ணடி பகுதி, செம்புதாஸ் தெருவில் இந்தியன் ஸ்டீல் டிரேடர்ஸ் என்ற இரும்புக் குழாய்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் விற்பனை மூலம் வசூலான பணம் ரூ.53 லட்சம் சனிக்கிழமை இரவு கொள்ளையடிக்கப்பட்டது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது; எனது கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நானும் சென்னை மாநகர காவல்துறை உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு கொள்ளையர்களைப் பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டேன்.
இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்தை இரும்புக் கடைக்கு அருகில் உள்ளவர்கள் தான் திட்டமிட்டு ஈடுபட்டுள்ளனர் என்றும், அதற்கு மணிமாறன் மற்றும் அவனது கூட்டாளிகள் தான் காரணம் என்றும் காவல்துறை தனிப் படையினர் கண்டுபிடித்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மணிமாறன் மற்றும் அவனது கூட்டாளிகள் 5 பேரைக் கைது செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.42 லட்சத்தை மீட்டுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் கொள்ளையர்களைக் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து பணத்தை மீட்க விரைந்து நடவடிக்கை எடுத்த சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஏ.கே.விஸ்நாதன் அவர்களுக்கும், இணை ஆனையாளர் திரு. ஜெயராமன், துணை ஆணையர் திரு.செல்வகுமார், உதவி ஆணையர் திரு. ஜான் அருமைநாதன், காவல் ஆய்வாளர்கள் திரு. சரவண பிரபு மற்றும் திரு. ஜீலியஸ்சீசர் ஆகியோருக்கும் எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply