சிறைவாசிகள் விடுதலையில் தமுமுக – மமக!

2595 Views

கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்ததிலிருந்து தமுமுக மமக சிறைவாசிகளுக்காக என்ன செய்ததது.

2011 க்குப் பிறகு ஒரு பார்வை.

TMMK-MMK Arppattam

#2011

தமிழகம் முழுவதிலும் சிறைவாசிகளுக்காகவும்; இட ஒதுக்கிட்டுக்காகவும் இரட்டை கோரிக்கை பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதிலும் நடத்தப்பட்டது

#2012
முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்கள் வாழ்வாதரத்திற்க்கு மிகவும் கஷ்ட்டப்பட்டு வந்ததை அறிந்த தமுமுக அவர்களுடைய வாழ்வாதரத்திற்கு வசூல் செய்து அவர்கள் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது

மீண்டும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டங்கள் தமிழகம்மெங்கும் போட்டு சிறைவாசிகளை பற்றிய விழிப்புணர்வை பட்டியல்யிட்டது மமக

#2013
கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி அறிவித்து முப்பெரும் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தடையை மீறி லட்சகணக்கான தொண்டர்களுடன் களம் கண்டது தமுமுக

#2014
அனைத்து ஆயுட் சிறைவாசிகளையும் விடுதலை செய்யகோரி தமிழக முதல்வர்க்கு தமுமுக துணைத் தலைவர் கோரிக்கைவிடுத்தார்..

#2015
10 ஆண்டுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம் சிறைாசிகளை விடுதலை செய்யகோரி தமுமுக தலைவர் தமிழக முதல்வர்க்கு கடிதம்..

மற்றும் 2011-12 சிறைதுரை மானியம் தொடங்கி கடைசியாக நடந்த சட்டமன்ற இறுதி வரை சிறைவாசிகளுக்காக 10க்கும் மேற்பட்ட தடவை சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்

சிறைவாசிகள் தாக்கப்பட்டத்தில் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதிலிருந்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்திலும் சலுகையிலிருந்தும் பெற்ற பிள்ளையாக பார்த்துக் கொண்டு வருகிறது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்..

அது மட்டுமா நோன்பு நாட்களில் சிவைாசிகள் கடமை நிறைவேற்ற உணவுகளை அதற்கு தேவையான பொருட்களையும் சரிவர அமைத்துக் கொடுகின்றது தமுமுக மமக

யாருக்கு உரிமை இருக்கின்றதோ இல்லையோ., நம் சகோதரர்களை காக்க பெரும் பங்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது..

இவை அனைத்தும் கடந்த ஐந்தாண்டு பட்டியலே.., முந்தை வரலாற்றை எடுத்தோமானால் இன்னும் வியந்து போக கூடிய அளவில் நம்முடைய போரட்டங்களை வரலாற்று பேசும்

இது மாதிரியான தேவையில்லாத அவதூரை பரப்புவோர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்.

– ஆவூர் சுல்தான்

Leave a Reply