கோவையில் இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு

2937 Views

கோவையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்ற இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு

kovai2

kovai1

சமுதாயத்தின் பேரியக்கமான தமுமுகவின் முதுகெலும்பான தொண்டர் அணி,விளையாட்டு அணி மற்றும் தமுமுகவின் அரசியல் பிரிவான மமகவின் இளைஞர் அணி ஆகியவற்றின் மாநில செயற்குழு 23.03.2017 அன்று கோவை பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கோவை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் குர்ஆன் விளக்க உரையாற்றி செயற்குழுவை துவக்கி வைத்தார். செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளராக தமுமுக மாநில துணைத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி அவர்கள் செயல்பட்டார். தமுமுக தொண்டர் அணி மாநில செயலாளர் கோவை சுலைமான் அவர்கள் வரவேற்புயாற்றினார்.

தமுமுக மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். தமுமுக மற்றும் மமக’வில் அங்கம் வகிக்ககூடிய அணிகளின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து பேசினார். இளைஞர்கள் தன் இளமை வயதை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும். நல்லொழுக்கத்தோடு இளைஞர்களை வழிநடத்த இஸ்லாம் கூறுவது என்ன என்பது குறித்து பேசினார்.

இந்த செயற்குழுவில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், துணைத்தலைவர் J.S.ரிபாயி, பொதுச்செயலாளர் P.S.ஹமீது, நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா, மமக மாநில பொதுச்செயலாளர் P.அப்துல் சமது, தமுமுக மாநில செயலாளர்கள் E.உமர், பழனி பாரூக், தொண்டர் அணி மாநில செயலாளர் கோவை சுலைமான், இளைஞர் அணி மாநில செயலாளர் புழல் ஷேக், விளையாட்டு அணி மாநில செயலாளர் நிஷார் அஹ்மத், MTS மாநில பொருளாளர் கோவை ஷாகுல் அமீது,கோவை மாவட்ட தமுமுக செயலாளர் இப்ராஹீம்,பொருளாளர் காதர் உசேன், மமக மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, பொருளாளர் ஜாபர் சாதிக், மற்றும் துணை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் வரும் செப்டம்பர் 16 அன்று மாநில அளவிலான தொண்டரனி அணி வகுப்பு நடத்துவது, மாதந்தோறும் தர்பியா வகுப்புகள் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply