கொடநாடு மர்ம மரணங்கள்: தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும்!

419 Views
கொடநாடு மர்ம மரணங்கள்:
தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும்!
Koda
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த மர்ம மரணங்களுக்குப் பின்புலமாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாம் மாத்யூ காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில் கொடநாட்டில் அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதைப் பற்றி வெளியில் சொல்லாத சயான் என்பவர், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.
சாயனின் இந்தக் காணொளி வாக்குமூலம் தமிழக மக்கள் மத்தியிலும் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை என ஆரம்பம் முதலே எதிர்க்கட்சியினர் வற்புறுத்தி வந்த நிலையில் இதுபோன்ற திடுக்கிடும் காணொளி வாக்குமூலம் வெளியாகி உள்ளது என்பது ஜெயலலிதாவின் மரணம் மட்டுமல்ல அதனைத் தொடர்ந்து பல மர்ம மரணங்கள் நடந்துள்ளன என்பது வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
மாநிலத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணையின்படி தான் அங்கு ஆவணங்கள் திருடப்பட்டன என்றும் அந்த வாக்குமூலத்தில் பதிவாகி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இந்தக் குற்றச்சாட்டுகனை சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள முதலமைச்சர் உடனே அப்பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
கொடநாடு எஸ்டேட் தொடர்பான காணொலி  வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் சாம் மேத்யூ மற்றும் ஒருவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கருத்துரிமைக்கு எதிரானது. இவ்வழக்கை திரும்பப்பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply