கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அபுதாகிர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்! உள்துறைச் செயலாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு!

1972 Views

கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அபுதாகிர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்!

உள்துறைச் செயலாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு!

1

2

3

கோவை சிறையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை சிறை அனுபவித்து வரும் அபுதாஹிர் எஸ்.எல்.ஈ. எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால்இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு கண்பார்வை குறைந்துள்ளது. இவரை கருணை அடிப்படையில் உடனே விடுதலை செய்யவேண்டும்.

மேலும் தமிழக காவல்துறை விசாரித்த பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துள்ள முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து வாழ்நாள சிறைவாசிகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு, சுதந்திரதின நாள், ஆகஸ்ட் 2 காந்தி ஜெயந்தி நாள் ஆகிய ஏதேனும் ஒரு நாளில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (10.08.2017) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உள்துறைச் செயலாளர் திரு. நிரஞ்சன் மார்டின் அவர்களை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் மமக நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இச்சந்திப்பின் போது தமுமுக மாநில செயலாளர் கோவை இ.உமர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அன்புடன்
எம். ஹூசைன் கனி
தலைமை நிலையச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply