குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம்..!

1243 Views
பொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம்..!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை.

குவைத் அரசினால் வழங்கப்பட்ட இருப்பிட அனுமதி நிபந்தனைகளை மீறிய 15 ஆயிரம் இந்தியர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வர இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. எஸ் ஜெயசங்கருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
.
குவைத் அரசு, இருப்பிட அனுமதி நிபந்தனையை மீறியவர்களுக்கு சமீபத்தில் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.
ஏழ்மையாலும்; புரிதல் இன்றியும்; முகவர்கள் ஏமாற்றியதாலும்; சில முதலாளிகளின் கொடுமையாலும், இருப்பிட அனுமதி சட்டத்தை மீறிய ஏராளமான இந்தியர்கள் குவைத்தில் உள்ளனர். இத்தகையோர் நாடு திரும்ப கடந்த ஏப்ரலில் குவைத் அரசு பொது மன்னிப்பு வழங்கியது. இந்த வாய்ப்பை பயன்படுத்துவோர், எவ்வித தண்டனையோ; பயணக்கட்டணமோ இன்றி தாயகம் திரும்பலாம் என்றும்; அவர்கள் மீண்டும் புதிய விசாவில் குவைத் வேலைகளுக்கு வரலாம் என்றும் சலுகை வழங்கியுள்ளது. அபராதத் தொகை செலுத்த இயலாமல் சிக்கித் தவித்த இந்தியர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

குவைத்திலுள்ள இந்திய தூதரகம், தாயகம் திரும்ப விரும்பும் ஆயிரக்கணக்கானோருக்கு, அவசரகால கடவுச்சீட்டு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தாயகம் திரும்ப எத்தனிக்கும் 15,000 நபர்களில், சுமார் 7,000 நபர்கள் தங்களின் அசல் கடவுச்சீட்டுடன், தயார் நிலையில், குவைத் அரசு அளித்துள்ள தங்குமிடத்தில் சுமார் 25 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். மீதமுள்ள 8,000 நபர்களுக்கு குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அவசரகால கடவுச்சீட்டு அளிக்க தாமதிப்பதால் உணவோ; உறைவிடாமோ இல்லாமல் தெருக்களில் அகதிகளாக அலையும் நிலை நிலவுகின்றது.

முறையான ஆவணங்களைப் பெற்றுள்ள 7000 நபர்களில், பெண்களும் முதியோர்களும் அதிகமாக உள்ளனர். இவர்களை குவைத் அரசு தங்களது விமானங்களில் கட்டணமின்றி திருப்பி அனுப்ப தயாராக உள்ளதாகவும்; இந்திய அதிகாரிகள் கால தாமதப்படுத்துவதாகவும் அறிய முடிகிறது. இதன் காரணமாக பொது மன்னிப்பு காலம் முடிந்து இவர்களின் நிலை மேலும் சிக்கலாகுமோ எனும் கவலை* எழுகின்றது*.

எனவே, இந்திய அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, சிக்கித்தவிக்கும் 7000 இந்தியர்கள் உடனே நாடு திரும்பவும்; மீதமுள்ள 8000 நபர்களுக்கு தேவையான அவசரகால கடவுச்சீட்டு தாமதமின்றி* *வழங்கி அவர்களை தாயகம் அழைத்து வர ஆவண செய்யும்படி உள்ளன்போடு கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படிக்கு
மாயவரம் ஜெ. அமீன்
தலைமை நிலையச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001
13 -05 -2020

Leave a Reply