குஜராத்தில் தமிழக மருத்துவ மாணவர் தேர்வு எழுத அனுமதி மறுப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1363 Views
குஜராத்தில் தமிழக மருத்துவ மாணவர் தேர்வு எழுத அனுமதி மறுப்பு:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
22688113_1194579960686576_5440787670266251932_n
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
குஜராத் மாநிலத்தில் மருத்துவம் பயின்றுவரும் நெல்லையைச் சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் தேர்வு எழுத அக்கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மருத்துவ மாணவர் மாரிராஜ் அக்கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் மொழி ரீதியாகியும், இனரீதியாகவும் தொடர்ந்து தொந்தரவு அளிக்கப்பட்டது என்றும், இதனால் மனம் உடைந்து தற்கொலை முயன்று காப்பாற்றப்பட்தாகவும் மாணவர் மாரிராஜ் கூறியுள்ளார்.
தற்கொலை குறித்த முதல் தகவல் அறிக்கையில் தற்கொலைக்கான காரணம் அக்கல்லூரி பேராசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்தப் புகாரை திரும்பப் பெறுமாறும் அதுவரை தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படாது என்றும் மறைமுகமாக அக்கல்லூரி நிர்வாகம் மாணவரை மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே வடமாநிலங்களில் பயின்ற தமிழக மாணவர்கள் இதுபோன்ற ஏற்றத்தாழ்வு காரணங்களை கூறிய பிறகு மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மாணவர் மாரிராஜை இன மற்றும் மொழி ரீதியாக அவமானப்படுத்தி உள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனே தலையிட்டு, மருத்துவ மாணவர் மாரிராஜ் வரும் மே மாதம் தொடங்கவிருக்கும் தேர்வை எழுதவும், வடமாநிலங்களில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும், இன மற்றும் மொழி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map