காஷ்மீரிகள் மீது ராணுவம் நடத்திவரும் அராஜக தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

2349 Views

காஷ்மீரிகள் மீது ராணுவம் நடத்திவரும் அராஜக தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

chennai1

காஷ்மீர் கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக பொதுமக்கள் மீது ராணுவம் அராஜகத்தைக் கட்டவிழ்த்துள்ளது. உலகில் தடை விதிக்கப்பட்ட பெல்லட் குண்டுகளை உபயோகப்படுத்தி காஷ்மீர் முஸ்லிம்கள் மீது அராஜகமான முறையில் துப்பாக்கிச் சூடு நடத்திவருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் கண் பார்வைகளை இழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் ராணுவத்தினர் தாக்கியுள்ளனர். மேலும் மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் காஷ்மீரின் பத்து மாவட்டங்கள் போர்க்களமாக மாறியுள்ளது. மத்திய பாஜக அரசு, ராணுவத்தின் அராஜகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் மேலும் மேலும் அங்கு ராணுவத்தைக் குவித்து வருகிறது. பாஜக ஆதரவுடன் இயங்கிவரும் பி.டி.பி. அரசோ அதனை வேடிக்கைப் பார்த்து வருகிறது.

காஷ்மீரில் அராஜகத்தைக் கட்டவிழ்த்துள்ள ராணுவத்தைக் கண்டித்தும், இதனை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு மற்றும் காஷ்மீர் மாநில அரசுகளைக் கண்டித்தும் தமுமுக சார்பில் இன்று (22.07.2015) சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

chennai11

தமுமுக மூத்த தலைவர் செ. ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பி.எம்.ஆர்.சம்சுதீன், துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மாநிலச் செயலாளர் மீரான் மைதீன், மமக அமைப்புச் செயலாளர் எம்.யாகூப், ஜே.அமீன், தலைமை நிலையச் செயலாளர் எம். ஹுசைன் கனி, மமக இளைஞர் அணிச் செயலாளர் புழல் ஷேக், மாவட்ட நிர்வாகிகள் எல். தாஹா நவீன், இ.எம்.ரசூல், எப். உஸ்மான் அலி, எச். முகம்மது தமீம், முகம்மது அனிபா, அகமது அலி ஜின்னா, அப்துல் ரவூப், சலீம் கான், சலீம் பாஷா, ஷாஜகான், ஷேக் தாவூத், அஸ்காப், எம். பஷீர், அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்

கண்டிக்கின்றோம்… கண்டிக்கின்றோம்… காஷ்மீர் மக்கள் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்..;

மக்களைக் காக்க ராணுவமா? மக்களைக் கொல்ல ராணுவமா?;

பூக்களை நசுக்க பூட்சுகளா? துப்பாக்கி ஏந்திய கோட்சேக்களா?;

குதறாதே… குதறாதே.. பிஞ்சுகளைக் குதறாதே…

கொல்லாதே… கொல்லாதே… காஷ்மீரிகளைக் கொல்லாதே…

நசுக்காதே… நசுக்காதே… மனித உரிமையை நசுக்காதே…;

மாட்டுத்தோலை உரித்ததற்காக குஜராத் தலித்மேல் கொடுமைகளா? முஸ்லிமாக இருப்பதனால் காஷ்மீர் மக்கள் படுகொலையா?;

பதவி விலகு… பதவி விலகு… மோடி அரசே பதவி விலகு…

உள்ளிட்ட கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

chennai

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள், பகுதி, கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிராக கண்டனக் கோஷங்களை முழங்கி னார்கள். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எல். தாஹா நவீன் நன்றி கூறினார்.

Leave a Reply