காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடியை ஏற்றுவோம்! மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் !!

2428 Views
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடியை ஏற்றுவோம்! மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் !!
25552056_1950308651651880_6920024811975477530_n
மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அமைக்க உத்தரவிட்ட பிறகும் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் இழைத்திருக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முதல்கட்டமாகத் தமிழகம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தி 100 விழுக்காடு வெற்றி யடைந்துள்ளது.
இந்த முழு அடைப்பிற்கு பிறகும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தொடர்ந்து தமிழர்களின் நலன்களை, உரிமைகளைப் பறிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் அனைவரது வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றவேண்டும் என திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் வரும் 12ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் நிலையில், அன்றைய தினம் அவருக்கு கருப்பு கொடி காட்டுவதுடன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றவேண்டும் எனவும், அவர் வரும் நாளில் அனைவரும் கருப்பு உடையணிந்து நம்முடைய வேதனையை, கண்டனத்தை வெளிப்படுத்தி முழுஅடைப்பை வெற்றி பெறச் செய்தது போன்று இந்த கருப்பு கொடி போராட்டத்தையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply