காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழுஅடைப்பு: மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு!

1617 Views
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழுஅடைப்பு:
மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு!
mhj new
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அமைக்க உத்தரவிட்ட பிறகும் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல்  தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்திருக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முதல்கட்டமாக தமிழகம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது என்று திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 5.4.2018 அன்று தமிழகம் தழுவிய அளவில் நடைபெற இருக்கும் முழுஅடைப்பிற்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், தமிழக மக்களின் வாழ்வுரிமைக்காகவும் நடைபெறவுள்ள இந்த முழுஅடைப்பு போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த விவசாயிகள், தொழிற்சங்கத்தினர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த தோழமைக் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து  பங்கேற்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply