காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் மீது தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

1495 Views
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் மீது தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
maniyarasan-attacked-in-tanjore-1528684522
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பெ. மணியரசன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தோழர் பெ. மணியரசன் அவர்கள் காவிரி உரிமைக்காக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகத் தொடர்ந்து தனது விமர்சனங்களை எடுத்து வைத்து வருபவர். காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனப் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருபவர்.
இந்நிலையில் நேற்று தஞ்சையிலிருந்து சென்னை செல்வதற்காக ரயில் நிலையம் வரும் வழியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரைத்  தாக்கி தப்பித்துச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும் எனவும், தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கு உரியப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map