ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர் சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1451 Views
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர் சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம்:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
25552056_1950308651651880_6920024811975477530_n
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தம்ம சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தமிழக ஆளுநர் அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரிய நாராயண சாஸ்திரி வெளி மாநில கல்லூரியில் பணியாற்றி வருபவரும், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி பல்வேறு குற்றச் சாட்டுகளுக்காக “ஒழுங்கு நடவடிக்கைக்கு” ஆளானவர் என்பதும் நாடறிந்த உண்மை.
மேலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டம் 1996ல் குறிப்பிட்டுள்ள விதி 12(1) மற்றும் 12(2) படி, தேடுதல் குழு இறுதி முடிவு செய்து கொடுக்கும் மூன்று பேரில் ஒருவரைத்தான் ஆளுநர் நியமிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒருவேளை தேடுதல் குழு அளித்திருக்கும் மூன்று பெயர்களில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை என்றால், அவர், புதிதாக ஒரு தேடுதல் குழுவை நியமிக்க உத்தரவிட்டு மீண்டும் பரிந்துரைகளை பெறவேண்டும். ஆனால் இந்தச் சட்டத்திற்கு முற்றிலும் மாறாகப் பரிந்துரை செய்த மூன்று பேரில் இல்லாத ஒருவரைத் துணை வேந்தராக நியமித்து அச்சட்டத்திற்கு முரணாக ஆளுநர் செயல்பட்டுள்ளார்.
இப்பதவிக்குத் தகுதியானவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளபோதும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவிற்கு நெருக்கமாக உள்ளவர்களை இதுபோன்ற பொறுப்புகளுக்கு நியமித்திருப்பதால், ஆளுநரின் இந்த நியமனம் முற்றிலும் உள்நோக்கம் கொண்டதாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
எனவே, சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தம்ம சூரிய நாராயண சாஸ்திரியின் நியமனத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும், பல்கலைக் கழக சட்ட விதிகளுக்கு உட்பட்டு புதிய துணைவேந்தரை நியமிக்க வேண்டும் எனவும் தமிழக ஆளுநரை மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map