ஏர்வாடியில் காஜா மைதீன் படுகொலை: குற்றவாளிகளை உடனே கைது செய்ய மமக வலியுறுத்தல்!

2284 Views

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

Ervadi Khaja

நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த காஜா மைதீன் என்ற இளைஞர் நேற்று இரவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமூக அக்கறையும், சேவை மனப்பான்மை கொண்ட காஜா மைதீன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மனிதாபிமானமற்ற இக்கொடூரச் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

காவல்துறை இக்கொலைச் சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் எனவும், கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காஜா மைதீன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

ஏர்வாடி பேரூராட்சியில் அவ்வூருக்கு தொடர்பில்லாத நபர்கள் ஆட்டோ நிறுத்தம் (ஸ்டாண்டு) மூலம் ஆட்டோ ஓட்டுவதுதான் இக்கொலைக்கு மூலக்காரணமாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே காவல்துறை, ஏர்வாடி பேரூராட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களால் நடத்தப்படும் சர்ச்சைக்குரிய ஆட்டோ நிறுத்தங்களை (ஸ்டாண்டு) அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply