2581 Views
எழுத்தாளர் அசோக மித்திரன் மரணம்!
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழின் ஆழமான எழுத்தாளரும், சாகித்ய அகாதமி விருதாளருமான அசோக மித்திரனின் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
எழுத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டு இயங்கிய அசோக மித்திரனின் எழுத்துக்கள் தமிழ் இலக்கிய உலகின் தனிப்பெரும் சொத்துக்கள்.
நடுத்தர மக்களின் வாழ்வியலை அவரது எழுத்துக்கள் சிறப்பாகப் பதிவு செய்தன. அவரது ‘தண்ணீர்’ நாவல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர்கள், வாசகப் பெருமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கிறோம்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி