உலக செவிலியர் தின வாழ்த்துகள்!

1205 Views
உலக செவிலியர் தின வாழ்த்துகள்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் .எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்து செய்தி:

மக்களுக்கு செவிலியர்கள் ஆற்றிவரும் உன்னத தொண்டை போற்றும் வகையில் சர்வதேச செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1974ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய அம்மமையார் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த தினத்தை சர்வதேச செவிலியர் தினமாக கடைபிடித்து வருகிறோம்.

நோயாளிகளை கவனித்துக் கொள்ளுதல், அவர்களுக்கு மருந்து மற்றும் உணவளித்தல் போன்ற சேவைகளை அர்ப்பணிப்புடன் செய்துவரும் அனைத்து செவிலியர்களுக்கும் இந்த தினத்தில் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் கொரோனா பேரழிவிலும் தங்களது உயிர்களை பணயம் வைத்து போராடி வரும் செவிலியர்களின் பணி மகத்தானது.

சுகாதாரச் சேவையை முன்னெடுத்துச் செல்வதிலும், நோய்த் தடுப்பிலும், ஆரம்ப சுகாதாரம் மற்றும் சமுதாய பராமரிப்பிலும், அவசரநிலை காலங்களிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் இல்லாமல் கொரோனாவிற்கு எதிரான இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெறுவதும், உலகில் நிலையான சுகாதாரத்தை கட்டமைப்பதும் கடினம்.

இந்நாளில் செவிலியர்களுக்கு நன்றி சொல்வது மட்டுமின்றி அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்க வேண்டும்.

தமிழகத்தில் பணியாற்றி வரும் தற்காலிக செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001

Leave a Reply