இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்!

1711 Views

இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்
Madras-High-Court***********

பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயம் அசத்தியம் அழியக் கூடியதே! – திருக்குர்ஆன் 17:82

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தானே என்று சொல்லியும் அக்டோபர் 6 2015 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரியும் மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிமை கோரியும் எம். தமீமுன் அன்சாரி தொடுத்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.

இந்த தருணத்தில் நமது சகோதரர் அனைவரும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். எழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவோம்.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ச்சியாக பொய்கள் தினமும் பரப்பபட்ட சூழலில் சத்தியத்தின் பக்கம் நிலைகுலையாமல் நின்ற மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுக்கும் ஆதரவு கரம் நீட்டிய அனைத்து சமுதாய மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி ஜஸாகுமுல்லா

எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் மனிதநேய மக்கள் கட்சியின் பணிகள் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்த வழக்கில் நமது தரப்பில் ஆஜரான மூத்த வழக்குறைஞர்கள் அஜ்மல் கான், ஹேமா சம்பத், வி. ராகவாச்சாரி மற்றும் வழக்குறைஞர்கள் நிசார் அஹ்மது, வி.லட்சுமிநாரயணன், மீனாள், அகில் அக்பர் அலி, நரேந்திரன், அஜிமத் பேகம், முஸ்தகீம் ராஜா, அப்ரார் அஹ்மது, அருண்மொழி பாத்திமா ஆகியோருக்கும நமது நன்றி உரிதாகட்டும்.

இனி அன்சாரியும் அவரை நம்பி சென்றவர்களும் தங்களை மனிதநேய மக்கள் கட்சி என்றோ அல்லது ம.ம.க.வின் கொடியையோ பயன்படுத்த முடியாது.

சத்தியம் வென்றிருக்கும் இத்தருணத்தில் நமது சகோதரர்கள் அனைவரும் அழகிய பொறுமையை கடைபிடிப்போம். இனி கள்ளத்தனமாக கட்சிக்கு சொந்தம் கொண்டாட முயன்றவர்களை மறந்து விடுவோம். கட்சியை வலுப்படுத்தவதில் மட்டும் கவனம் செலுத்துவோம்.

Leave a Reply