இராமேஸ்வரத்தில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்க மமக கோரிக்கை

2204 Views

20.04.2012 அன்று கேள்வி நேரத்தில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் எழுப்பிய கேள்வியும், அதற்கு அமைச்சரின் பதிலுரையும்:

முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமேஸ்வரம் நகராட்சிக்குச் சொந்தமான மீன் அங்காடி, காய்கறி அங்காடி மிகப் பழுதுபட்டதொரு நிலையிலே இருக்கின்றன. அந்த இடத்திலே, இந்த மீன் அங்காடி உட்பட ஒருங்கிணைந்த ஒரு வணிக வளாகம் அமைப்பதற்கு இந்த அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. கே.பி. முனுசாமி:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கை நியாயமான கோரிக்கை. ஆனால், அங்கே ஏற்கெனவே இருக்கிற அந்த அங்காடிகளை மாற்று ஏற்பாடுகள் செய்கின்ற அளவுக்கு வாய்ப்பு இருக்கின்ற இடம் இருந்தால், அதை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் புதியதாக, நல்ல முறையிலே அங்காடி கட்டி, மீண்டும் அவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply