இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதும்பெரும் தலைவர் ஏபி பரதன் மரணம்!

2320 Views

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

Baradan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் தலைசிறந்த சமூக நீதி போராளியுமான தோழர் ஏ பி பரதன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி அறிந்து துயரமடைந்தேன்.
15 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தனது வாழ்நாள் முழுவதும் அடிதட்டு மக்களுக்காக கடுமையாக பாடுபட்ட தொழில்சங்கவாதியாக களம் கண்டவர் தோழர் பரதன்.
மண்டல் பரிந்துரைக்கு ஆதரவாக செயல்பட்டு சமூக நீதிக்காக என்றும் ஆதரவாக அவர் செயல்பட்டார்.

நாட்டில். நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றி விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்கு ஆதரவான பிரச்சார களத்தில் அவருடன் இணைந்து செயல்பட்டது எனக்கு மறக்க முடியாத அனுபவம் ஆகும்.

தோழர் பரதனின் மரணம் நாட்டு மக்களுக்கு மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கும் இடதுசாரி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்

எம் எச் ஜவாஹிருல்லா

Leave a Reply