இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை சுமூக முடிவிற்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

2190 Views
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை சுமூக முடிவிற்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! 
teachers-protest-1524489773
 
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 ஊதிய முரண்பாடுகளைக் களைத்து ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் உள்பட ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இரவு பகல் பாராது போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.
தமிழக அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் அரசாணைக்குப் பிறகு, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே பெரிய அளவிலான ஊதிய முரண்பாடுகள் நிலவி வருகின்றன. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டி, இம்மாத இறுதியில் போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
மத்திய மாநில ஆசிரியர்களுக்கு இடையே மட்டும் ஊதிய முரண்பாடுகள் நிலவவில்லை, தமிழக ஆசிரியர்களுக்குக்கிடையே 2009 ஜூன் மாதத்துக்கு முன் வேலைக்குச் சேர்ந்தவருக்கும், அதன் பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கும் இடையே 3,770 ரூபாய் ஊதிய முரண்பாடு நிலவுகிறது.  இந்த முரண்பாடுகளைக் களைத்து சம வேலைக்காகச் சம ஊதியத்தை வழங்க வேண்டும் என இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்னும் நான்கைந்து நாட்களில் அரையாண்டு விடுமுறைகள் முடிவு பெற்று பள்ளிக்கூடங்கள் தொடங்கவிருக்கும் நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் மாணவ மாணவிகளின் கல்வியை பெரிதும் பாதிக்கும்.
எனவே, தமிழக முதலமைச்சர் தலையிட்டு இடைநிலை ஆசிரியர் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply