ஆக்கூர்-மடப்புரத்தில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

2906 Views

ஆக்கூர்-மடப்புரத்தில்  அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

akkur

akkur 1

akkur 2

akkur 3

28.10.2017 அன்று நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர்-மடப்புரம் கிளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மமக கிளை செயலாளர் A.முஹம்மது தாஜுதீன் தலைமையிலும், மாவட்ட,ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

ஆக்கூர்-மடப்புரம் கிளையின் முன்னாள் செயலாளர் சலாவுதீன் அனைவரையும் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் O.சேக் அலாவுதீன்,மமக மாவட்ட செயலாளர் M.S.ஆரிப் ஆகியோர் உரையாற்றினார்கள்.

மமக பொதுச் செயலாளர் P.அப்துல் சமது,மமக மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் J.அமீன், மமக மாநில விவசாய அணி செயலாளர் OMA.முசாஹீதீன், கழக பேச்சாளர் பழனி I.பாரூக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இறுதியாக மமக கிளை துணைச் செயலாளர் A.சதாம் ஹுசைன் நன்றியுரை கூறினார். எழுச்சி பொதுக்கூட்டத்தில் கழக சொந்தங்கள் பொதுமக்கள் என பெரும்பாலானோர் திரளாக கலந்துக்கொண்டனர்

அரசியல் எழுச்சி பொதுக்கூட்டத்தின் போது அடியக்கமங்கலம் பகுதியில் வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 15க்கும் மேற்பட்ட சகோதரர்கள் மமக பொதுச்செயலாளர் P.அப்துல் சமது அவர்களின் முன்னிலையில் தங்களை மனிதநேய மக்கள் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

Leave a Reply