அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்

2714 Views

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

இறைவனின் பேரருளால் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

மிகக்கடுமையாக களத்தில் போராடிய திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புதிய தமிழகம், திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல், அனைத்துப் பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஜமாத்தார்கள், உலமாக்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது பணிகளுக்காக எல்லா நிலையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், பிரார்த்தனைகள் புரிந்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியினருக்காகப் பாடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சொந்தங்களுக்கும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மயிலாடுதுறை தொகுதியில் ஓய்வின்றி உழைத்த மனிதநேய மக்கள் கட்சியின் சொந்தங்களுக்கும் தேன்சிந்தும் வார்த்தைகளால் உளமாற நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைவன் நம் அனைவரையும் உழைப்பையும் பொருந்திக் கொள்வானாக!

– ஜே.எஸ்.ரிபாயீ,

தலைவர்,

மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply