அச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு

828 Views

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ் மக்பூல் அவர்கள் இன்று மரணித்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். என் மீது மிகுந்த பாசமுடையவர்.

எளிமையான குடும்பம். இருப்பினும் தனது மகன் ஷாஜஹானின் சமுதாய பணிகளுக்கு உறுதுணையாக நின்றவர்கள் அவரது தந்தையும் தாயாரும். சமுதாய பணியில் ஷாஜஹான் பல்வேறு துயரங்களை சந்தித்த போது அவரது பணிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் அவரது தந்தை. தமுமுகவின் அனைத்து போராட்டங்களிலும் அவர் பங்குக் கொள்வார். சமுதாய பணிக்காக தனது மகனை அற்பணித்தவர்

ஜனாப் மக்பூல் அவர்கள். சமீபத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நாம் நடத்திய இணைய வழி போராட்டத்திலும் கருப்பு சட்டை அணிந்து பங்குக் கொண்டார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு மறுமையின் உயர்ந்த நற்பேறுககை வழங்குவதற்கும் அவரை இழந்து வாடும் சகோதரர் ஷாஜஹான் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை அளிக்கவும் பிரார்த்தனை செய்கிறேன்.

Leave a Reply