முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்: 
மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்.
Rajastan_Hindu_Activ (1)Rajastan_Hindu_Activ (2)
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
ராஜஸ்தான் மாநிலத்தில் சோட்டி சத்ரி பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள  சிட்ரோகர் வழியாக வியாபாரத்திற்காக 50 மாடுகளை ஏற்றிவந்த வாகனத்தை மறித்து அதிலிருந்த ஓட்டுனர் மற்றும் மூவரை காவல்துறையினரின் கண்முன்னே நிர்வாணப்படுத்தி கொடூரமாகத் தாக்கிய பாசிச வெறிபிடித்த மனித மிருகங்களை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இரக்கமற்ற முறையில் அரக்கத்தனமாக சித்திரவதைகள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் நாட்டில் மதவாத பாசிச சக்திகளின் வெறியாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவே உணர முடிகிறது. இதுமட்டுமல்லாமல் கடும் தாக்குதலுக்கு உட்பட்ட லாரி ஓட்டுனர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தாத்ரியில் மாட்டுக் கறி வைத்திருந்தார் என அக்லாக் என்ற பெரியவரை அடித்துக்கொன்றது, மார்ச் 2016ல் ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டுக் கறி வியாபாரம் செய்ததற்காக 13 வயது முஸ்லிம் சிறுவன் உட்பட இரண்டு பேரை அடித்து து£க்கில் போட்டுக் கொன்றது என தற்போது அதே கொடூரக் கொள்கைக் கொண்ட வன்முறைக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.
நாளுக்கு நாள் மனித உரிமை, மனித நேயம் என்ற உயரிய மாண்புகளுக்கு அர்த்தமே இல்லாமல் இந்திய தேசம் போய்க்கொண்டுள்ளது. மே 2014 முதல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்த சமூகவிரோதிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துணிச்சலை இந்நாட்டு மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்நாட்டில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின  மக்களின் உயிர்களுக்கு உத்திரவாதம் உண்டா இல்லையா? என்ற கேள்வியை இந்தச் சம்பவங்கள் எழுப்பியுள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு எப்போதும்போல் வேடிக்கைப் பார்க்காமல் இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும், ராஜஸ்தான் அரசு இச்சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் மூலம் தண்டனைப்பெற்றுத் தரவும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அன்புடன்
(எம்.எச்.ஜவாஹிருல்லா)
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply