பீகாரில் முழு மதுவிலக்கு: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!

110 Views
பீகாரில் முழு மதுவிலக்கு: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை:
Nithish_Kumar
பீகாரில் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற நிதீஷ்குமார் ‘1.4.2016 முதல் பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார். தான் அறிவித்தபடியே 1.4.2016 அன்று, நகர்ப்புறங்களைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினார் நிதீஷ்குமார்.
பீகார் முதல்வரின் அறிவிப்பிற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்ததாலும், நகர்ப்புறங்களிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மாநிலம் முழுவதும் கோரிக்கை எழுந்ததாலும் 100 சதவீத முழு மதுவிலக்கை நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
நாட்டையே சீரழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் மது என்னும் தீமையை ஒழிக்க உறுதி பூண்டிருக்கும் நிதிஷ் குமார் அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பீகாரைப் போலவே தமிழகத்திலும் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா

 

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map