4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்! திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

31 Views
4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்!
திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய  நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மே 19 அன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு தமிழக மக்களின் உரிமைகளையும் நலன்களையும் மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்துவிட்டது.

தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாக ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை மத்திய பாஜக அரசு செயல்படுத்துவதை எடப்பாடி அரசு அனுமதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்பில்லாத சூழல் உருவாகியுள்ளதை எடப்பாடி அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. இவ்வாறு பல்வேறு வடிவங்களில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தமிழக மக்களின் உரிமைகளை பறிகொடுத்துள்ளது.

தமிழக மக்களின் நலன்களை காக்க வேண்டுமெனில் மோடி அரசுக்கு சேவகம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

எனவே மே 19 அன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்து தமிழகத்தில் நல்லாட்சி மலர வழிவகுக்குமாறு  மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply