மனிதநேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா: தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் பரப்புரை நிகழ்ச்சிகள்!

மனிதநேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா:
தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில்
சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் பரப்புரை நிகழ்ச்சிகள்!
27544963_1262260063918565_8516727216484243592_n
மனிதநேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, சென்னை முதல் கன்னியாகுமரி வரை, கிழக்கு கடற்கரைச் சாலை வழியே உள்ள எமது கிளை அமைப்புகளின் சார்பில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில், கொடியேற்றுதல் நிகழ்ச்சி, மரக்கன்று நடுதல், படிப்பகம் திறப்பு, ஏழைகளுக்கு உணவு வழங்குதல் நிகழ்ச்சிகளையும், சில குறிப்பிட்ட கிளைகளில் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இப்பயணத்தின் போது…
1) மீனவர்களை கடற்கரையை விட்டு வெளியேற்றும் மத்திய அரசின் ‘சாகர் மாலா’ திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும்…
2) இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கிய உரிமைகளைப் பறித்து கொண்டுவரத் துடிக்கும் ‘முத்தலாக்’ சட்டத்தை எதிர்த்தும்…
3) மின்னணு வாக்குப்பதிவு முறையைக் கைவிட்டு வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்கும் முறையை நடைமுறைப்படுத்திடக் கோரியும்…
இப்பயணத்தின் போது விழிப்புணர்வு பரப்புரை செய்யப்படும்
கோட்டை முதல் குமரி வரை மனிதநேய மக்கள் கட்சி துவக்க தினமான இன்று (பிப்ரவரி 7) சென்னை, புதுவண்னை, செரியன் நகர், மண்ணடி, பட்டிணப்பாக்கம், அடையாறு போன்ற இடங்களில் கட்சிக் கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சித் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மமக அமைப்புச் செயலாளர் எம்.யாகூப் ஆகியோரும், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மாவட்ட மமக மற்றும் தமுமுக நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்
Leave a Reply