விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

1143 Views
விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி மரணம்!
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
sivakami_2972938f
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா
வெளியிடும் இரங்கல் அறிக்கை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ஆர்.சிவசாமி அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்து பெரிதும் வருந்தினேன்.
மருத்துவரான அவர் தனது மருத்துவப் பணியை உதறிவிட்டு விவசாயிகளின் நலனுக்காக முழுமையாக களமிறங்கினார். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரி தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு நடைபெற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர். இவரது போராட்டத்தினால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஆர்.சிவசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க அன்பர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map