விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்குப் பாசிச சக்திகளால் ஆபத்து: அரசு உரிய பாதுகாப்பை வழங்க கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கடிதம் !

659 Views
விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்குப் பாசிச சக்திகளால் ஆபத்து: அரசு உரிய பாதுகாப்பை வழங்க கோரி தமிழக முதலமைச்சருக்கு
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கடிதம் !
மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வெளியிடும் செய்தி குறிப்பு:
ravikumar-600-1535622337
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சகோ. ரவிக்குமாரின் பெயர் பாசிச மதவாத சக்திகளின் கொலைப்பட்டியலில் இருப்பதாகச் சமீபத்தில் ஊடகங்கள் மூலம் தெரியவந்தது. சங்பரிவார அமைப்புகளால் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
“நாட்டில் பாசிச அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக எழுதியும் பேசியும் வரும் முற்போக்கு சிந்தனையாளர்களை குறித்து வைத்துத் தாக்குவதும், கொலை செய்வதும் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பது தாங்கள் அறிந்ததே.
பாசிச அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராகச் சமரசமில்லாமல் எழுதியும் பேசியும் வந்த கௌரி லங்கேஷ், கல்புர்கி, கோவிந்த் பனசாரே, தபோல்கர் ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது அந்தக் கொலைப்பட்டியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ரவிக்குமார் பெயரும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
மதவாதத்தையும், சாதிய வாதத்தையும் எதிர்த்துப் பல நு£ற்களை எழுதியும், மதவாத சக்திகளை கடுமையாக விமர்சித்தும் வரும் தோழர் ரவிக்குமாருக்கு சங்பரிவார அமைப்புகளிடமிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
தலித் மக்கள் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிவரும் தோழர் ரவிக்குமார் உயிருக்குப் சங்பரிவார அமைப்புகளால் ஆபத்து இருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகத் தெரியவந்துள்ளது.
எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தோழர் ரவிக்குமார் அவர்களுக்கு உரியப் பாதுகாப்பை வழங்கவும், ஜனநாயக சக்திகளின் பிரதிநிதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடும் ஜனநாயக  விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவண்
மனிதநேய மக்கள் கட்சி
தலைமையகம்
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map