ரெட்டித்தோப்பு மேம்பாலம் கோரிக்கையை வலியுறுத்தி ஆம்பூரில் ஆர்ப்பாட்டம்
ஆம்பூர் ரெட்டி தோப்பு மக்களின் பல்லாண்டு கனவான ரெட்டித்தோப்பு மேம்பாலம் கோரிக்கையை வலியுறுத்தி நகர மமக சார்பில் 22.12.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ், மமக மாவட்ட செயலாளர் அப்துல் சுக்கூர், இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநில துணை செயலாளர் சனாவுல்லாஹ் ஆகியோர் கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட பொருளாளர் செய்யத் ஜாவித் உள்ளிட்ட மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மமக மாநில அமைப்பு செயலாளர் அ.அஸ்லம் பாஷா ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
பேராசிரியர் தமது உரையின் இறுதியில், “3 மாத அவகாசத்தில் மேம்பாலம் கட்டப்பட வில்லை என்றால், வேலூரில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்” என எச்சரித்தார்.
திமுக மாவட்ட விவசாய அணி செயலாளர் திரு.சாமுவேல் செல்லபாண்டியன், ஜமாத் தலைவர்கள், அப்பகுதியில் உள்ள கிறித்துவ போதகர்கள் மற்றும் பெண்கள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.