மோடி அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ரிசர்வ் வங்கி முற்றுகை

500, 1000 ரூபாயை சரியான திட்டமிடல் இல்லாமல் செல்லாததாக்கி சாதாரண மக்களின் வாழ்க்கையை முடக்கிய மோடி அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ரிசர்வ் வங்கி முற்றுகை
15032050_750526788427988_4777673851133281478_n15036248_750527025094631_9180492318021859024_n15073338_750526888427978_4158521291157457867_n15032251_1792950400964830_6210179413252150179_n20161118_16540415094498_1792950437631493_2131071250472755381_n20161118_16541820161118_165436
மத்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் கடந்த 8.11.2016 அன்று திடீரென ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு புதிய ரூ-.2000ஐ வழங்கி வருகிறது. ஒரு வாரத்திற்கு மேலாகியும் நிலைமை கொஞ்சமும் சீராகவில்லை. நோயாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள் என கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் வங்கிகளின் முன்பு தங்களின் சேமிப்பு பணத்தை மாற்றுவதற்காக மணிக்கணக்கில் நிற்கும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இவ்விஷயமாக நோயாளிகள், முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், வங்கி மேலாளர், வங்கி ஊழியர்கள் என சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
மத்திய அரசின் கையாலாகத்தனத்தையும், நாட்டு மக்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களைப் பிச்சைக்காரர்களாக்கி வங்கிகள் முன் நிறுத்தி அலைக்கழித்து வருவதைக் கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மமக தலைமை நிலையச் செயலாளர் எம். ஹுசைன் கனி, மனிதநேய தொழிற்சங்க செயலாளர் சம்சுதீன் சேட், மமக வழக்கறிஞர் அணிச் செயலாளர் எம். ஜைனுல் ஆபிதீன், இளைஞர் அணிச் செயலாளர் சேக் முஹம்மது அலி, மாவட்ட நிர்வாகிகள் எச். முகம்மது தமீம், இ.எம்.ரசூல், அகமது அலி ஜின்னா, எப். உஸ்மான் அலி, எல். தாஹா நவீன், முகம்மது அனிபா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள், பகுதி, கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்தியன் வங்கியிலிருந்து மாலை 5 மணியளவில் ரிசர்வ் வங்கியை நோக்கி, மோடிக்கு எதிராக கோஷமிட்டவாறே முன்னேறிய மனிதநேய மக்கள் கட்சியினரை அங்கே இருந்த காவலர்கள் கைது செய்தனர்.
Leave a Reply