முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பேரா.கே.எம்.காதர் மொய்தீன் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!

முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பேரா.கே.எம்.காதர் மொய்தீன் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!
kader-mohideen-600-10-1476099598
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பேரா.கே.எம்.காதர் மொய்தீன் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பின்வரும் வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார்:
“இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த தாங்கள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போதுள்ள சவாலான அரசியல் சூழலில் சிறுபான்மை சமூகத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காகவும் நாம் ஆற்றவேண்டியுள்ள பணிகள் ஏராளம், இப்பணிகளை தொய்வில்லாமல் ஆற்ற நல்ல உடல்நிலையையும், ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு வழங்க பிரார்த்திக்கின்றேன்.”
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply