முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த வணிகர்கள் தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி!!

1752 Views
முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த வணிகர்கள் தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி!!
chennai
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழ்நாடு வரலாறு காணாத வறட்சியில் சிக்கித் தவிக்கும் போது விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், கேரளா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் பவானி, காவிரி, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரியும், போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தியும் 25.4.2017 அன்று தமிழகம் தழுவிய “முழு அடைப்புப் போராட்டம்” நடத்த எதிர்கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவித்திருந்தது.
தமிழக மக்கள் உணர்வுப்பூர்வமாக தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்து முழு அடைப்பு வெற்றிபெறச் செய்துள்ளார்கள். மனிதநேய மக்கள் கட்சியினர் பல்வேறு ஊர்களில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் பங்குகொண்டு  பெருமளவில் கைதாகினர்.
முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றியடைய வைத்த தமிழக மக்களுக்கு  மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான முன்முயற்சியில் ஈடுபட்ட தமிழக எதிர்க்கட்சி தலைவர் திரு. மு.க.ஸ்டாலின், வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகள் உள்ளிட்ட ஆதரவளித்த அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply