முழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள், தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி!

1755 Views
முழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள், தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
57438621
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் காவிரியின் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்தும், சொத்துக்களை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் சார்பாக இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பிற்கு போராட்டத்திற்கு  அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவித்திருந்தது.
தமிழக மக்கள் உணர்வுப்பூர்வமாக இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்து முழுஅடைப்பு வெற்றிப் பெறச் செய்துள்ளார்கள். இன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பல்வேறு ஊர்களில் ரயில் மறியல்  மத்திய அரசு அலுவலகங்கள. முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் பங்குக் கொண்டு மனிதநேய மக்கள் கட்சியினர் பெருமளவில் கைதாகினர்.
இன்றைய கடை அடைப்பு போராட்டத்தை வெற்றியடைய வைத்த தமிழக மக்களுக்கு  மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான முன்முயற்சியில் ஈடுப்பட்ட செய்த வணிகர் சங்கங்கள்  விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகள் உள்ளிட்ட ஆதரவளித்த அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு தமிழகத்திற்கு நியாயமாக வரவேண்டிய தண்ணீர் கிடைப்பதற்கு மத்திய அரசு உடனடியாக ஆவனச் செய்ய வேண்டும்.
காவேரி ஒழுங்காற்று ஆணையம் உடனடியாக அமைக்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க மத்திய அரசு வழிவகைச் செய்ய வேண்டும். கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு சட்டபூர்வ நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply