முதல்வரின் உடல்நிலையை விசாரித்த தலைமை நிர்வாகிகள்

97 Views

முதல்வரின் உடல்நிலையை விசாரித்த தலைமை நிர்வாகிகள்

215463

அ.இஅ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்கள். அவர்களை நலம் விசாரிக்க 9.10.2016 அன்று காலை 10.30 மணியளவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக துணைத் தலைவர் குணங்குடி அனிபா, தமுமுக பொதுச் செயலாளர் பி.எஸ்.ஹமீது, தமுமுக பொருளாளர் பி.எம்.ஆர்.ஷம்சுதீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எம்.ஹூஸைன் கனி, வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை தமுமுக, மமக நிர்வாகிகள் சென்று முதல்வரின் உடல்நலன் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்து அமைச்சர்களை சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்தனர்.

Leave a Reply