மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையகத்திற்கு முன் கட்சி கொடியை எரித்துத் தாக்குதல் நடத்த முயற்சி: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையகத்திற்கு முன் கட்சி கொடியை எரித்துத் தாக்குதல் நடத்த முயற்சி:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
mhj new
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கேரள மாநிலத்தில் பாஜகவை அரசியல் ரீதியாக எதிராக தொடர்ந்து செயல்பட்டுவருவதாகக் கூறி சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைமை அலுவலகத்தினை முற்றுகையிட்ட பாஜகவின் மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி.யினர் மார்க்சிஸ்ட் கொடியை எரித்து அலுவலகத்தைத் தாக்க முயற்சித்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கேளராவில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தனது தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், மதச்சார்பின்மைக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களாலும்,  மோசமான ஆட்சி நிர்வாகத்தினாலும் பாஜக அரசு அனைத்துத் துறையிலும் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. பாஜகவின் அராஜகங்களை துணிச்சலுடன் மார்க்சிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தி வருகிறது.
தமிழகத்திலும் தொடர்ந்து வெறுப்பு பேச்சுக்களை பேசுவதுடன் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு காட்டுபவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி பதற்றத்தில் ஆழ்த்திவரும் தமிழக பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்  மீது தமிழக அரசும், தமிழகக் காவல்துறையும் கடுமையாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
Leave a Reply