மாநாட்டு துளிகள்!

510 Views

* உளவுத்துறை அதிகாரி ஒருவர் ம.ம.க மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மானிடம், ‘கடும் பனியிலும் கடைசிவரை கலையாமல் இருந்த கூட்டம் எங்களை ஆச்சரியப்படுத்தியது, என்று கூறியுள்ளார்.

* திருவாரூர் மோதிலால் ஆஸ்வால் நிறுவன நிர்வாக இயக்குநர், ஃபெரோஷ் ஷா, கூறும்போது, கடைசிவரை கலையாமல் இப்படி ஒரு பெருந்திரளை தெற்கு வீதியில் நான் பார்த்தது இப்போது தான் என்று கூறியுள்ளார்.

* வாகன வசதிகளை மாநாடு நடத்து பவர்கள் செய்து கொடுக்காவிட்டாலும், நாங்களாகவே வாகனம் எடுத்துக் கொண்டு வந்தோம் ஆண்களோ கலக்காமல், பெண்களுக்குத் தனியாக இடம் ஒதுக்கி வசதி செய்து தந்ததும், பெரிய அளவில் பெண்கள் பங்கேற்றதும் மாநாட்டின் சிறப்பு என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த ஜுலைகா .

* தெற்கு விதியைச் சேர்ந்த புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர், ‘முஸ்லிம் கட்சி என்று அறியப்பட்டாலும், உங்கள் மாநாட்டில் பேசப்பட்டக் கருத்துகள், எதிர்கால அரசியலில், உங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு, என்பதற்கு முன்னோட்டமாக இருந்தது  என்றார்.

* மாநில மாநாடுகள் நடத்தும் போதுதான் இதுபோன்ற கூட்டம் திரளும், திருவாரூரில் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காணும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். கொடிக்கால் பாளையத் தைச் சேர்ந்த சபுரன் ஜமீலா.

* மாநாட்டில் இளைஞர் அணிக் கான சீறுடையுடன் நூற்றுக் கணக்கானோர் சுழன்று இயங்கினர்.

* மேடையை சுற்றிலும் இளைஞர் அணியிலிருந்து தேர்ந்தெடுக்க 15 பேர் சிறப்பு பாதுகாப்பு படையாக உருவாக்கப்பட்டு அவர் கள் மேடையை சுற்றிலும் நிறுத் தப்பட்டிருந்தனர்.

* வாகனங்களை ஒழுங்குப் படுத்தும் விதமாக வாக்கி, டாக்கி கருவிகளுடன் இளைஞர் அணியினர் செயல்பட்டதால், பணிகள் தகவல் தொடர்புகளுடன் துல்லியமாக மேற் கொள்ளப்பட்டது.

* பல்வேறு ஊர்களை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் மேடைக்கு வந்து அமர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

* பல தீர்மானங்கள் உற்சாகத் தோடு வரவேற்கப்பட, திருவாரூக்கு விமான நிலையமும், தஞ்சாவூருக்கு புதிய பாஸ்போர்ட் கிளை அலுவலகமும் தேவை என்ற தீர்மானமும் வாசிக்கப்பட்டப் போது மாநாட்டில் பெரும் ஆரவாரம் எழுந்தது. அதாவது இப்பகுதி மக்களின் வெளிநாட்டு வாழ்க்கையின் தாக்கத்தை உணர முடிந்தது.

* கூட்டம் கட்டுக் கடங்காமல் போக பேருந்து நிலையம் மற்றும் சுவர்களிலும் கூட்டம் ஏறி நின்று கொண்டிருந்தது.

* மமகவின் காலண்டர்களுக்கு மாநாட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. அதுபோல் புத்தக கடைகளும், சி.டி கடைகளும் கூட்டமயமாக இருந்தது.

* மாநாட்டு நிகழ்ச்சிகளை படப் பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் கருவி களும், நான்கு கேமராக்கள் சுழன்று சுழன்று படம்பிடித்துக் கொண்டிருந்தது. அரை கிலோ மீட்டர் நீளமான அந்த அகலமான வீதியில் ஆங்காங்கே டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு, சிரமமின்றி மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map