மதுக்கூர் மைதீன் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மதுக்கூர் மைதீன் கொலை:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

mhj redpix

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த மதுக்கூர் மைதீன் அவர்கள் நேற்று இரவு மதுக்கூர் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒருமித்து செயல்படவேண்டிய இந்த தருணத்தில் இதுபோன்ற படுகொலை நடைபெற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சகோதரர் மைதீனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் சகோதரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம்வல்ல இறைவன் அவருக்கு மறுமையின் நற்பேறுகளை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply