மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி ஆகியோருடன் இஸ்லாமியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு!

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி ஆகியோருடன் இஸ்லாமியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு!

vaiko2

k-veeramani

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களையும், திராவிடர் கழகம் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களையும் தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து, பொது சிவில் சட்டம் கொண்டுவரத் துடிக்கும் மத்திய பாஜக ஆட்சியின் முயற்சி குறித்து எடுத்துரைத்து முஸ்லிம் சமூகத்தின் உணர்வுப்பூர்வமான இப்பிரச்னையில் ஒத்துழைப்பு கோரும் கடிதத்தை அளித்தனர். மேலும் பொதுசிவில் சட்டம் குறித்த முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆதரவு கோரினர்.

இச்சந்திப்பின்போது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மவ்லவி கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் உமர் பாரூக், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியாவின் தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவர் முனீர் அஹமது, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் மவ்லவி தர்வேஸ் ரஷாதி மற்றும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனிபா ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply