மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!
மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!
mhj new
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை ஆறு மாதங்களில் மூட வேண்டும் எனவும், புதிய மணல் குவாரிகளை அனுமதிக்கக்கூடாது எனவும், வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்யத் தடை இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு மிகுந்த உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன்.
மணல் குவாரிகள் என்ற பெயரில்  நதிகளின் நாடி நரம்புவரை சென்று மணலைக் கொள்ளையடித்து வந்த மணல் மாஃபியாக்களுக்கு சம்மட்டி அடியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மணல் குவாரிகளால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர் குறைந்து, விவசாயமும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இதுபோன்ற ஒரு நீதிமன்றத் தீர்ப்பு மணல்கொள்ளைக்கு எதிராகப் போராடும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஊந்து சக்தியாக அமைந்துள்ளது.
தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி, ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்கவும், மணல் தேவைகளுக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply