பேரறிவளான் உட்பட 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக உடனடியாக முடிவெடுக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

462 Views
பேரறிவளான் உட்பட 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக உடனடியாக முடிவெடுக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
perarivalan
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யத் தமிழக சட்டமன்றத்தில் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதன்பிறகு வாழ்நாள் சிறைவாசிகளாக இருக்கும் ஏழு தமிழர்களை முன்கூடியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2014ஆம் ஆண்டே அவர்களை விடுதலை செய்வதற்காக மத்திய அரசிற்குக் கடிதம் எழுதியிருந்தது.
தமிழக அரசின் கடிதத்தை கருணையுடன் பரிசீலித்து ஒப்புதல் வழங்க   வேண்டிய மத்திய அரசு, அக்கடிதத்தைப் பல நாட்கள் கிடப்பில் போட்டு விட்டு பிறகு குடியரசுத் தலைவர் மூலம் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை நிராகரித்தது.
இந்நிலையில் இந்த ஏழு தமிழர்களின் விடுதலைக் குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் கூறிவந்ததை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த 14வது சட்டமன்றத்தில் ஏழு தமிழர் விடுதலைத் தொடர்பான விவாதத்தில் பங்குகொண்டு நான் உரையாற்றிய போது அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது விதியின்படி மாநில அரசுக்கு வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலைச் செய்யும் அதிகாரம் உண்டு என்று நான் பேசினேன். இதுகுறித்து தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற கடிதம் எழுதி மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுத்தது.
தற்போது மாநில அரசிற்கு இந்த அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதின் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி  சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து இன்றே தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநர் மூலம் அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map