பூவுலகு புத்துயிர் பெற்று மீண்டும் இயங்க வேண்டும்!

437 Views

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் மே தின வாழ்த்து செய்தி

உலகமெங்கும் உள்ள உழைக்கும் மக்களின் உரிமை திருநாளான மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்நன்னாளில் தொழிலாளர்களைச் சுரண்டும் அனைத்து சக்திகளையும் ஒழித்து தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும், பயன்களையும் அடைய உறுதியேற்போம்.
உழைப்புச் சுரண்டலுக்கெதிராக உடலுழைப்பாளிகளுக்கும், மன உழைப்பாளிகளுக்கும் என்றும் துணைநிற்போம்..
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இயக்கமில்லாமல் இருக்கும் இந்த பூவுலகமும், தொழிலாளர்களும் தங்களைப் புதுப்பித்து மீண்டும் இயங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட்டு மீண்டும் தொழில்கள் தொடங்கி தொழிலாளர்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் கொழிக்கட்டும்.

பெரு முதலாளிகளுக்குக் கடன் தள்ளுபடி என்ற பெயரால் 68000 கோடி தள்ளுபடி செய்து ஏழை இந்திய மக்களை வஞ்சிக்கும் இந்த பெருமுதலாளிகளுக்கான அரசை எதிர்த்துப் போராட இந்த மே தினத்தில் உறுதி ஏற்போம்.

குழந்தைத் தொழிலை ஒழிப்போம்!
குலத்தொழில் முறையை அழிப்போம்!
தூய்மை தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டுவோம்!
உழைப்பவரை உயர்த்துவோம்!
ஊழியரை வாழ்த்துவோம்!

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001

Leave a Reply